கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
மணக்குள விநாயகர் கோயிலில் கோமாதா பூஜை!
உலக பிரசித்திபெற்ற புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 10 ஆம் ஆண்டு துவக்க விழா 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இன்று காலை 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜை நடைபெற்றது. இதில் மணக்குள விநாயகர் கோவிலுக்குள் 27 பசுக்கள் அழைத்து வரப்பட்டு கோமாதா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்துகொண்டு பசுக்களுக்குப் பூஜை செய்து வழிபட்டார். அதே போல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நாளை காலை லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அருள்மிகு மணக்குள விநாயகருக்கு 1008 சங்க அபிஷேகம் நடத்தப்பட்டு இரவு உற்சவர் மூர்த்தி வீதி உலா நடைபெற உள்ளது.