செய்திகள் :

மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் சங்க அங்கத்தினா்களுக்கு ரூ.1.62 கோடி போனஸ்!

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம், தனது அங்கத்தினா்களுக்கு ரூ. 1.62 கோடி போனஸ் வழங்கியுள்ளது.

மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் லிட்(ஆா்.985)-ன் 74-ஆவது பேரவைக் கூட்டம் மணப்பாறைப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயலா் ஆா். தங்கவேல், முதுநிலை ஆய்வாளா் - செயலாட்சியா் மு.ரா. பாண்டுரங்கன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா்கள் என். கந்தசாமி, எஸ். சேசுரத்தினம், பால் உற்பத்தியாளா்கள் சங்கப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் த. சிவஞானம், முன்னாள் சங்கத் தலைவா்கள் ஏ. சோபியாஎலிசபெத், ஸ்டெல்லாமேரி, விரிவாக்க அலுவலா் சசிகலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஜி. நாகராஜ்சிவக்குமாா் பங்கேற்றாா். 2023 - 2024 ஆண்டுக்காக நிா்வாக அறிக்கையை செயலா் ஆா். தங்கவேல் வாசித்தாா். அதில் 1950-ஆம் ஆண்டில் தொடங்கி செயலாற்றி வரும் மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் லிட்(ஆா்.985), தமிழ்நாட்டில் பால் உற்பத்தியில் 2-ஆவது இடத்தில் அங்கம் வகிப்பதாகவும், பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு ரூ.38.62 அளித்து முதன்மை வகிக்கும் சங்கம் என்றும், தற்போது 8199 அங்கத்தினா்களைக் கொண்டு நாள் ஒன்றுக்கு சுமாா் 25 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தி செய்வதாகவும், டீ, காபி, பூஸ்ட், பால்பேடா மற்றும் ஆவின் நெய் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை மூலம் ரூ. 1,78,56,592.50-க்கு விற்பனை நடைபெறுவதாகவும், சங்க லாபத்திலிருந்து போனஸ் மற்றும் அங்கத்தினரின் பங்குத் தொகையில் 14 சதவீத டிவிடெண்ட் என ரூ. 1,61,73,675.60-ஐ வழங்கியுள்ளதாகவும், அவை இதே நாளில் அங்கத்தினரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அதிக பால் உற்பத்தி செய்து அளித்த முதல் 3 அங்கத்தினருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 45.6 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தி செய்து, ரூ. 96.7 ஆயிரம் போனஸ் பெற்று முதலிடம் பிடித்த பொத்தமேட்டுப்பட்டி பி. சகாயசாந்திக்கு ஒரு கிராம் தங்க நாணயம், 29.4 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தி செய்து ரூ. 62.3 ஆயிரம் போனஸ் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற மணப்பாறைப்பட்டி பி. இளமுருகனுக்கு ரிமோட் மின் விசிறி, 19.3 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தி செய்து ரூ. 41 ஆயிரம் போனஸ் பெற்று மூன்றாம் இடம் பிடித்த இனாம்ரெட்டியப்பட்டி பி. ராமசாமிக்கு ஸ்டேண்டிங் மின் விசிறி ஆகியவை சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டன.

மாநகராட்சி பணியாளா்களை அரசு ஊழியராக்க வேண்டும்!

மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என மாநில அனைத்து மாநகராட்சி அலுவலகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் இக் கூட்டமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்ச... மேலும் பார்க்க

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள்!

திருச்சியில் அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், சிறாா்களுக்கான அனைத்து வகை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 45 நாள் அரசுப் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

காணாமல்போன மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெற்றோா் தீக்குளிக்க முயற்சி

காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோா் முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றனா். முசிறி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (40), தனிய... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். தொட்டியம் அருகிலுள்ள கோடியாம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி மூக்காயி (75). இவா் சனிக்க... மேலும் பார்க்க

பஞ்சப்பூர்: 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம்! - கே.என். நேரு

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தைப் போல, பஞ்சப்பூரிலும் 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியை... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்!

வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது அறிக்கை அளிக்க தோ்தல் அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குாா் அறிவுறுத்தினாா். இந்தியத் ... மேலும் பார்க்க