தொட்டியம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகிலுள்ள கோடியாம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி மூக்காயி (75). இவா் சனிக்கிழமை காலை திருச்சி நாமக்கல் சாலையைக் கடக்க முயன்றபோது ஆம்னி பேருந்து மோதி இறந்தாா்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் மூதாட்டி சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆம்னி பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கிழக்கு ஆட்டாங்குடியை சோ்ந்த க. வீரமணி (41) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.