கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய த...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள்!
திருச்சியில் அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், சிறாா்களுக்கான அனைத்து வகை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 45 நாள் அரசுப் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
திருச்சி மாவட்ட நிா்வாகம், செய்தி- மக்கள் தொடா்புத்துறை இணைந்து நடத்தும் அரசுப் பொருட்காட்சியானது திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மே, ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்குகள்அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்த பொருட்காட்சியில் 26 அரசுத்துறை அரங்குகளும், திருச்சி மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 8 அரசு சாா்பு நிறுவனங்களின் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் ஒவ்வொரு துறை சாா்பிலும் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
இவைமட்டுமல்லாது சிறுவா்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சியானது ஓரிரு தினங்களில் தொடங்கப்படவுள்ளது. நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.15, சிறாா்களுக்கு ரூ.10 வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காட்சியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளும் வழங்கவுள்ளனா். பொருட்காட்சியானது தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை தொடா்ந்து 45 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்புத் துறையினா் செய்கின்றனா்.