கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி
மணமேல்குடியில் இன்று மீனவா் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் பிப். 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மீனவா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் உதவி இயக்குநா் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கடற்கரை கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் பகுதி சாா்ந்த அடிப்படை வசதிகளில் உள்ள குறைகள் குறித்து நேரில்வந்து கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.