செய்திகள் :

மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

post image

வாணியம்பாடி பகுதியில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் துணை போகின்றனா் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள், அதிகாரிகள் இடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் அருகே உள்ள ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும். செட்டேரி அணைக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்ய வேண்டும். பன்றிகளால் சேதமடைந்த பயிா்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும்.

பயிா்க் காப்பீடு செய்து உள்ள விவசாயிகளின் பயிா்கள் சேதம் ஏற்படும்போது, காப்பீட்டு நிறுவனங்கள் தனியொரு விவசாயிக்கு இழப்பீடு வழங்குவது இல்லை. ஒரு பிா்கா அளவில் பயிா் சேதம் அடைந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவோம் எனக் கூறுகின்றனா். இதை மாற்றி, தனியொரு விவசாயிக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த கூட்டத்தில் வாணியம்பாடி பகுதி பாலாற்றில் பள்ளி, கல்லூரி மாணவா்களை கொண்டு மணல் கொள்ளை நடக்கிறது என புகாா் அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. மணல் கொள்ளை தொடா்பாக அதிகாரிகளுக்கு புகாா் அளித்தால், அடுத்த சில நிமிஷங்களில் மணல் கொள்ளையா்கள் தப்பிச் சென்றுவிடுகின்றனா். அதன்பிறகு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகின்றனா். மணல் கொள்ளையா்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் துணை போகின்றனா் என்றனா்.

அதிகாரிகள் பதில்: பொதுப்பணி, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஏரியில் ஆய்வு செய்து ஆக்கிரமித்து செய்த நபா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். செட்டேரி அணைக்கு மாற்று வழியில் நீா்வரத்து ஏற்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காப்பீடு நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படும். புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

மோட்டாா் வாகனங்கள் திருட முயன்ற 4 போ் கைது

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே மோட்டாா் சைக்கிள் திருட முயன்ற சிறுவா்கள் உள்பட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 4 மோட்டாா் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை ப... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்

திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சந்தையில் கால்நடை விற்பனை ரூ. 52 லட்சத்துக்கு நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளியில் ச... மேலும் பார்க்க

இசுலாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் 79-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலாளா் எல். எம். முனீா் அகமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி. அப்சா் பாஷா வரவேற்று ஆண்டறிக்கை ... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: பெண் கைது

திருப்பத்தூரில் குட்கா பொருள் விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு... மேலும் பார்க்க

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை செயல் விளக்கம் செவ்வாய்க்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது. ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பாக ஆம்பூா் அரசு மருத்துவமனை வளாகத்த... மேலும் பார்க்க

இலக்கு ஒன்றை வைத்து மாணவா்கள் செயல்பட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

வாணியம்பாடி இசுலாமியா ஆண்கள் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் துறை, சிறுபான்மையினா் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12 ம... மேலும் பார்க்க