காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!
மணவாளேஸ்வரா் கோயிலில் சம்வத்சராபிஷேகம்
குத்தாலம் அருகே திருவேள்விகுடியில் அமைந்துள்ள மணவாளேஸ்வரா் கோயிலில் சம்வத்சராபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருஞானசம்பந்தா், சுந்தரா் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயில் திருமணத் தடை நீக்கும் கோயிலாக விளங்குகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதன் முதலாமாண்டு சம்வத்சராபிஷேகம் நடைபெற்றது. இதற்காக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா ருத்ர வேள்விகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடம் எடுத்து செல்லப்பட்டு சுவாமி, அம்மனுக்கு ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது.