மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!
மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கெய்புல் லாம்ஜாவோ காவல் நிலையத்திற்கு உள்பட்ட லைசோய் மலைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். மீட்கப்பட்ட பொருள்களில் எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், கார்பைன்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.