சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி
மணிப்பூரில் 2 மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்பு
மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்ட் கெல்மோல் கிராமத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு ஏகே-56 ரைபிள் உட்பட ஏழு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சீன கையெறி குண்டு ஆகியவை மீட்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் தெங்னௌபாலில் உள்ள மோரேக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தலா 1 கிலோ எடையுள்ள இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் கிட்டத்தட்ட 5 கிலோ எடையுடன் ஒரு ஐஇடி-ஐ மீட்டனர்.
தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை குகி பழங்குடிகள் எதிா்த்ததைத் தொடா்ந்து உருவான மோதல் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.