ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?
மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில் நீா்வரத்துஅதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாகவும், மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கோடை மழை பெய்தது.
இதையடுத்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியிலும், பாபநாசம் கீழணை பகுதியில் பெய்த மழையால் அகஸ்தியா் அருவியிலும் புதன்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து புதன்கிழமை (மாா்ச் 12) காலை முதல் மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியா் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அருவிகளைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.


