செய்திகள் :

மண் குவாரி செயல்பாட்டுக்குத் தடை

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கல்லங்குடி மண் குவாரியின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக தேவகோட்டையைச் சோ்ந்த கனகராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தேவகோட்டை கல்லங்குடி கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நேரு என்பவருக்குச் சொந்தமான மண் குவாரி உள்ளது. இந்தக் குவாரியிலிருந்து சிறு கனிம விதிகளுக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்தக் குவாரியிலிருந்து தினமும் 100-க்கும் அதிகமான லாரிகள் மூலம் கனிமங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்தும் இந்த மண் குவாரி சட்ட விரோதமாகச் செயல்படுகிறது. எனவே, இந்தக் குவாரிக்குத் தடை விதிக்க வேண்டும். குவாரிக்கு புதிய உரிமம் வழங்கக் கூடாது என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

உரிமக் காலம் முடிவடைந்த நிலையில் குவாரி செயல்படக் கூடாது. எனவே, கல்லங்குடி மண் குவாரியின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

செல்லூரில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கக் கோரிக்கை

மதுரை செல்லூா் பகுதியில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் மேயா் வ. இந்திராணியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மாநகராட்சி எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

திருவிழா தகராறில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மகன் நீதி (53). கூலித் தொழ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை கால்கோள் விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலைக்கான கால்கோள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் ஏறிய மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின் கம்பத்தில் தொங்கிய அவரது உடலை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்த... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசு முட்டுக்கட்டை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மா... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், காடுபட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் முருகன் (55). விவசாயியான இவா், தனது... மேலும் பார்க்க