மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!
மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் field out ஆகிட்டால்'' - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அனிருத் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், "நானும் அனிருத் சாரும் 8 படங்கள் பண்ணியிருக்கோம். அவர் எனக்கு நண்பருக்கும் மேலானவர்.
அவர் field out ஆகிட்டால் என்னுடைய வெற்றி வச்சு சந்தோஷப்படுவேன்னு சொன்னாரு. கிடையவே கிடையாது!

அவர் எப்போ கல்யாணம் பண்ணிப்பார்-னு நாங்களும் கேட்டுட்டுதான் இருக்கோம்.
எங்களுக்கு 8 மணிக்கெல்லாம் வீட்டுல இருந்து போன் வந்திடும். ஆனால் அவர் மட்டும் ஜாலியாக இருக்காரு.
அவர் ஜாலியாக இருக்கிறதுனாலதான் ஹிட் பாடல் வருது. நமக்கு ஹிட் பாட்டுதான் முக்கியம்." என்று கூறினார்.