Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்யா
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வாட்டிகன் நகரத்தில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில் அவருக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர், "புனித பேதுரு பேராலயத்திற்குள் நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு சென்றபோது, ஐந்து இளைஞர்கள் என்னைப் பின்தொடர்வதை உணர்ந்தேன்.
ஏதோ ஒன்று என் நடவடிக்கைகளில் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னைக் கண்காணிக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

புனித பேதுரு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சற்று முன் நான் நின்று, அவர்களை எதிர்கொண்டேன். 'யார் நீங்கள்? ஏன் என்னைப் பின்தொடர்கின்றீர்கள்?' என்று கேட்டபோது, 'நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'இந்தியா, தமிழ்நாடு' என்றேன்.
'எதற்காக வந்திருக்கிறீர்கள்?' என்றார்கள். 'சுற்றுலா' என்றேன். 'எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?' என்று கேட்டார்கள். 'ஏன் இவையெல்லாம் கேட்கிறீர்கள்?' என்றபோது, எனது மோதிர விரலில் திராவிட ரத்னா, தமிழினக் காவலர், என் அன்புத் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்களின் முகம் பதித்த மோதிரத்தைச் சுட்டிக்காட்டி, 'இது எதன் அடையாளம்?' என்று கேட்டார்கள்.
நான் சிரித்துக்கொண்டே, 'நான் ஒரு அரசியல்வாதி, இது என்னுடைய தலைவர்' என்றேன். அவர்கள் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
'அது சரி, இதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்?' என்றபோது, அவர்கள் சொன்னார்கள், 'நாங்கள் மதங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்கள். ஐரோப்பாவில் ஆண்கள் இதைப் போன்று பெரிய கல் பதித்த மோதிரம் அணிவது இல்லை.
இதைப் போன்ற மீன் சின்னம் பதித்த பெரிய மோதிரத்தைப் போப்பாண்டவர் அணிந்திருப்பார். அது புனித பேதுரு மூலமாக வந்தது.
அவரைச் சந்திக்க வருகின்ற குருமார்கள் தாழ்ந்து வணங்கி, அந்த மோதிரத்தில் முத்தம் பதிப்பார்கள்' என்று விளக்கம் சொன்னார்கள்.
'அதைப் போன்று, உங்கள் கையில் இருக்கும் மோதிரம் ஏதாவது மதம் சார்ந்ததாக இருக்குமோ என்ற ஆவலில்தான் உங்களைப் பின்தொடர்ந்தோம்' என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்கள்.

இனிய தோழமைகளே, இலங்கை அசோக வனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதையைக் கண்டு, தான் இராமனின் தூதுவன் என்பதற்குச் சாட்சியாக, இராமன் சீதை திருமணத்தின் போது அணிவித்த மோதிரத்தைக் காட்டி, தன் நிலையை உறுதிப்படுத்துவான் சொல்லின் செல்வன் அனுமன்.
அதைப் போன்றே, நான் திராவிட இயக்கப் போர்வாள், புரட்சிப் புயல், தலைவர் வைகோ எம்பி அவர்களின் முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் - இதுதான் என் அடையாளம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb