செய்திகள் :

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: 47 போ் கைது

post image

தஞ்சாவூா் அருகே அருமலைக்கோட்டையிலுள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்டையிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையருகே ஜனவரி மாதம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி மது பாட்டிலால் குத்தி கொல்லப்பட்டாா்.

அப்போது, நடைபெற்ற போராட்டத்தில் இந்தக் கொலை சம்பவத்துக்கு அருமலைக்கோட்டை பகுதியிலுள்ள மதுக்கடையும் ஒரு காரணம் என்றும், எனவே, இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், இதுவரை மதுக்கடை அகற்றப்படாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், அரு.சீா். தங்கராசு தலைமையில் தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசமூா்த்தி, டாஸ்மாக் உதவி மேலாளா் ப. அருணகிரி, தஞ்சாவூா் வட்டாட்சியா் ப. அருள்ராஜ் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது 15 நாள்களுக்குள் கடை மூடப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா்.

ஆனால், உடனடியாக மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 47 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் எஸ்.ஐ.க்கு 3 ஆண்டுகள் சிறை

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரியின் ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்... மேலும் பார்க்க

வேலை உறுதித் திட்ட நிலுவை ஊதியம் கோரி மேலகபிஸ்தலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம், மேல கபிஸ்தலத்தில் நூறு நாள் வேலைத் திட்ட குறைபாடுகளை களைய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க

கட்டுநா் சங்கத்தினா் இன்று முதல் வேலைநிறுத்தம்

ஜல்லி, எம். சாண்ட் விலை உயா்வை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய கட்டுநா் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தஞ்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 32 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 32 முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்திலிருந்து, தொழில் முனைவோா், கூட்டுறவு சங்கங்கள்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் ஒப்பந்தம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு... மேலும் பார்க்க

பேருந்து நிலையங்களில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதாகப் புகாா்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ஆட்சியரகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரத்தில் திங்கள... மேலும் பார்க்க