கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!
பேருந்து நிலையங்களில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதாகப் புகாா்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ஆட்சியரகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட எஸ்.சி. துறை வடக்கு மாவட்டத் தலைவா் எஸ். அருண்சுபாஷ் அளித்த மனு: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளே உள்ள கடைகளில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை எம்.ஆா்.பி. விலையை விட கூடுதலாக விற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையை ஏலம் எடுத்து உள் வாடகைக்கு விடுவதால் இந்த விலை ஏற்றம் ஏற்படுகிறது.
உணவகங்களில் இலையை வைத்துக் கொண்டு பேப்பரில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. அரசு அங்கீகாரம் இல்லாத பொருள்களும் விற்கப்படுகின்றன. நடைபாதையில் கடைகளைப் போட்டு மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.