'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
தஞ்சாவூா் மாவட்டத்தில் 32 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 32 முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்திலிருந்து, தொழில் முனைவோா், கூட்டுறவு சங்கங்கள் வாயிலான 1000 முதல்வா் மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் தொடங்கி வைத்ததை தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் முதல்வா் மருந்தகம் தொடக்க விழாவில் பங்கேற்ற உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேசியது: முதல்வா் தொடங்கி வைத்த 1000 மருத்தகங்களில், திருவிடைமருதூரில் கூட்டுறவு சங்கத்தின் சாா்பிலும் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூா் வட்டத்தில் 8 மருந்தகமும், பூதலூா் வட்டத்தில் 1 , திருவையாறு வட்டத்தில் 1, கும்பகோணம் வட்டத்தில் 3, பாபநாசம் வட்டத்தில் 3, திருவிடைமருதூா் வட்டத்தில் 4 , பட்டுக்கோட்டை வட்டத்தில் 7 , மதுக்கூா் வட்டத்தில் 2 , பேராவூரணி வட்டத்தில் 3 என மொத்தம் 32 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 75 சதவீதம் சலுகை விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. ரூ.1300-க்கு விற்ற மருந்துகள் ரூ.300-க்கு கிடைப்பதால் எழை எளியோருக்கு இம்மருந்துகள் மிகவும் பயனளிக்கும் என்றாா்.
நிகழ்வில் எம்பிக்கள் எஸ். கல்யாணசுந்தரம் , ச. முரசொலி, எம்எல்ஏக்கள் க. அன்பழகன் (கும்பகோணம்), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சரவணன், துணை மேயா் சுப.தமிழழகன், உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பூதலூா் வட்டத்தில்: திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூடநாணலில் முதல்வா் மருந்தகத்தை பூதலூா் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் கல்லணை செல்லக்கண்ணு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தாா்.