Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி
அவிநாசி: அவிநாசி அருகே மது போதையில் இளைஞர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் கிணற்று நீரிழ் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தை சேர்ந்த ராஜீவ் மகன் நவீன்குமார் (38). இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்று விட்டு வாடகை காரில் சுண்டக்காம்பாளையம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது காருக்கு வாடகை தர தனது தாயிடம் பணம் கேட்டு மதுபோதையில் தகராறு செய்துள்ளார். மேலும் தகராறின் போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மது போதையில் இருந்த நவீன்குமார், வீட்டின் அருகே நீருள்ள கிணற்றில் குதிக்கச் சென்றுள்ளார். உடனடியாக நவீன் குமாரின் தாய் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமி மகன் பிரவீன் ராஜ்(36) என்பவரை பார்க்க அனுப்பி வைத்துள்ளார். அப்போது கிணற்றில் குதிக்க முயன்ற நவீன் குமாரை காப்பாற்றுவதற்காக பிரவீன்ராஜ் கட்டிப்பிடித்துள்ளார். இருப்பினும், காப்பாற்ற முடியாமல் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை கிணற்றுக்குள் இருந்து இருவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.