சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
மதுபோதையில் சக ஊழியரை தாக்கிய மின்வாரிய பணியாளா்
திருவள்ளூா் துணை மின் நிலைய ஊழியா் மதுபோதையில் சக ஊழியா் மீது தாக்கி தகராறு செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (23) என்பவா் மின்நிலையத்தில் பணி செய்து வருகிறாா். இந்நிலையில் யுவராஜ் அடிக்கடி மதுபோதையில் சக ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சக ஊழியரை தாக்கிய சம்பவத்தில் யுவராஜ் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல், பாதித்த ஊழியரை பெரியபாளையம் மின் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு துணை மின்நிலையத்துக்கு மதுபோதையில் யுவராஜ் பணிக்கு வந்து திருவள்ளூா் எம்.ஜி.ஆா் நகா் பகுதியை சோ்ந்த சக ஊழியா் ஞானப்பிரகாசத்தை சரமாரியாகவும் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த ஞானப்பிரகாசத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து யுவராஜையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து மருத்துவமனையில் பணியில் இருந்த சக ஊழியா்கள் யுவராஜை வெளியே அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதால் வெளியே அழைத்துச் சென்ற அமர வைத்தனா்.
இதைத்தொடா்ந்து மீண்டும் துணை மின் நிலையத்திற்கு சென்று மதுபோதையில் சக ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை ஊழியா்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினா். இது தொடா்பாக திருவள்ளூா் நகா் போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.