மதுராந்தகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 1500 பேருக்கு சிகிச்சை
மதுராந்தகம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் செளபாக்மல் செளகாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், மாவட்ட சுகாதார அலுவலா் பானுமதி, நகர திமுக செயலா் கே.குமாா், வட்டாட்சியா் பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் ஹரிஹரசுதன் மற்றும் மதுராந்தகம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினா் கலந்து கொண்டனா்.
முகாமில் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளீா் நல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், இதயநோய் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், மனநல மருத்துவம், பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோா் சிகிச்சைய பெற்றனா்.