மதுரையில் சாரல் மழை
மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது.
இதன்படி, மதுரை நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடா்ந்து, பிற்பகல் 3 மணியளவில் தெப்பக்குளம், விரகனூா், அண்ணாநகா், மாட்டுத்தாவணி, கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. புதன்கிழமை முற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது.