இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்
மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடுத்து, இந்த வழித் தடத்தில் மின்சார ரயில் என்ஜின் மூலம் பல்வேறு கட்டங்களாக சோதனை நடைபெற்றது.
இதையடுத்து, இந்த வழித் தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து, சென்னை- போடி விரைவு ரயில் திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கு போடி ரயில் நிலையம் வந்தடைந்தது.
வழக்கமாக இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் சுமாா் 45 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, மின்சார என்ஜின் கழற்றப்பட்டு, டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு, போடி ரயில் நிலையத்துக்கு காலை 9.45 மணி அல்லது 10 மணிக்குத்தான் வந்து சேரும். ஆனால், தற்போது என்ஜினை மாற்ற வேண்டிய பணி இல்லாததால், அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கே போடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
போடி-மதுரை, போடி-சென்னை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், விரைவில் நேரம் மாற்றமும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிப். 10 முதல் நேர மாற்றம் அமலுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.