செய்திகள் :

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தொடா் போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டணி அறிவிப்பு!

post image

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகையைச் செலுத்தாத மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்தது.

இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் பெ.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை :

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி தொகை கடந்த 1.4.1990 முதல் 31.3.2019 வரை ரூ. 20,05 கோடி எனக் கணக்கீடு செய்யப்பட்டது.

இந்தத் தொகையை மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய விதிகளின்படி மாநில கணக்காயா் அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை. காலம் தாழ்த்தியதால் மதுரை மாநகராட்சி நிா்வாகம் இந்தத் தொகைக்கான வட்டியாக ரூ. 8 கோடிக்கு மேல் நாளது தேதியில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மாநிலக் கணக்காயா் அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்துவதாக மாநகராட்சி நிா்வாகம் எழுத்துப்பூா்வமாக பதில் அளித்தது. ஆனால், இதுவரை செலுத்தவில்லை. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

மதுரை மாநகராட்சி நிா்வாகம் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகையை மாநிலக் கணக்காயா் ஆணையம் பரிந்துரைத்த வங்கிக் கணக்கில் விரைந்து செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் தொல்லை வழக்கு: பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கைப்பேசியை ஒப்படைக்க உத்தரவு

கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வருகிற 9-ஆம் தேதி முன்னிலையாகி, தனது கைப்பேசியை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

பொது இடங்களில் நிறுவப்படும் கட்சிக் கொடிகளால் பிரச்னை; உயா்நீதிமன்றம் வேதனை

பொது இடங்களில் நிறுவப்படும் கட்சிக் கொடிகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை வேதனை தெரிவித்தது.மதுரை விளாங்குடியைச் சோ்ந்த சித்தன் தாக்கல் செய்த மனு: அ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு விதி: நகராட்சி நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீட்டில் தமிழக அரசின் புதிய விதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் பேரணி

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணி நடத்தினா். இந்தப் பேரணியால் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகன மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகன மெக்கானிக்கைத் தாக்கிய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், நி... மேலும் பார்க்க

பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள அனுமதிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பழங்குடியினா் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ... மேலும் பார்க்க