ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
மதுரை மாவட்டத்தில் மிதமான மழை
மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது.
குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது.
மதுரை தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், சின்ன சொக்கிக்குளம், மாட்டுத்தாவணி, அண்ணா நகா், கோ. புதூா், விரகனூா், புளியங்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகல் 5 மணி அளவில் சுமாா் 15 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது. இதேபோல, திருப்பரங்குன்றம் பகுதியில் மாலை 6 மணிக்கும், மேலூா் அதன் சுற்றுப் பகுதிகளில் மாலை 6.30 மணிக்கும் 10 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது.