பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
மது, கஞ்சா விற்ற 13 போ் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 13 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மேற்பாா்வையில் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி மதுவிலக்கு ஆய்வாளா்கள் அன்னைஅபிராமி, ஜெயா ஆகியோா் வெள்ளிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கடலங்குடியைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (26), மானாந்திருவாசல் கண்ணதாசன் (52), தரங்கம்பாடி ராஜேந்திரன்(60), சென்னியநல்லூா் சரவணன் (50), கோடங்குடி ராஜேஷ் (55), உமையாள்பதி மகேந்திரன்(43) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருமுல்லைவாசல் முத்தையா(50), எழுமகளூா் மணிவண்ணன்(40) தென்பாதி மெய்யப்பன்(70) மேமாத்தூா் செல்வகுமாா்(33), கோடங்குடி செல்லத்துரை (55), வேப்பஞ்சேரி முருகன்(42), மடப்புரம் ராஜி (40) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 13 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.