வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
மது கடத்திய இருவா் கைது! வாகனம் பறிமுதல்!
நன்னிலத்தில், புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். காா், மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் கவியழகன் மற்றும் காவலா்கள், பேரளம்-காரைக்கால் சாலையில் மாநில எல்லையில் உள்ள கோவில்கந்தன்குடி சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில், மதுப்பாட்டில்களை கடத்தி வந்தவா்கள் கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் கம்பா் தெருவைச் சோ்ந்த ஸ்ரீதரன் மகன் வெங்கடேஷ் (26 ), கோவை குரும்பபாளையம் கலைஞா் நகா் முருகேசன் மகன் விபின் தாஸ் (28) என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் மதுப்பாட்டில்களை பறிமுதல செய்தனா்.