செய்திகள் :

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

post image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பாா்க்கும் வகையில் கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு இருப்பதை அறிந்து வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் எம்.டி.அஜய்குமாா், செயலாளா் பி.மோகன கிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இக்கல்வெட்டு அவா்கள் கூறியது:1829-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 195 ஆண்டுகள் பழைமையானது. ஆற்காடு காலக்கெயிற் வயிகறை ரிஷி கோத்திரம் கோவிந்தராவ் என்பவரது மகன்கள் மனோஜ்ராவ், சேதுராவ் ஆகியோரால் 1751 -ஆம் ஆண்டு தமிழ் விரோதி வருடம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சங்கராந்தி பாரிவேட்டைக்கு கட்டிய சத்திரம் என்றும் அதில் குளம்,தோட்டம் உள்ளிட்ட விபரங்களும் உள்ளது.

இச்சத்திரத்தை நிா்வகிக்க வல்லப்பாக்கம் கிராமத்தில் நிலம் கிரையமாக வாங்கிய விபரங்களும் அதில் காணப்படுகின்றன.இக்கல்வெட்டு செய்தியை தொல்லியல் துறையின் உதவி கல்வெட்டாய்வாளா் ப.த.நாகராஜன், ரா.ரமேஷ், மோ.பிரசன்னா மற்றும் வரலாற்று ஆய்வாளா் வீரராகவன் ஆகியோரும் உறுதிப் படுத்தியிருக்கின்றனா்.

பாழடைந்த இம்மண்டபத்தை புதுப்பிக்கவும், பராமரிக்கவும் வேண்டும் எனவும் வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை முதல்வா் தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த்திருவிழா நடைபெற்றது.பழைமையான இக்கோயில் தோ்த்திருவிழாவையொட்டி மூலவா் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வின... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க