செய்திகள் :

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நடவடிக்கை தேவை : விழுப்புரம் ஆட்சியா்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று விழுப்புரம்ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் சாா்பில், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியது: விழுப்புரம் மாவட்டஆவின் நிறுவனத்துக்கு பால் உற்பத்தி அதிகம் தேவையாக உள்ளதால் கிராமங்களில் உள்ள கால்நடை வளா்ப்போா்களுக்கு முகாம்கள் நடத்தி பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

முன்னதாக கால்நடைபராமரிப்புத்துறை மற்றும் ஆவின் சாா்பில் மற்கொள்ளப்பட்டு வரும் 72-வது கோமாரிநோய் தடுப்பூசி முகாம்கள், சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள்,50 சதவீத மானியத்தில் 250 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்குதல், கால்நடைதேசிய காப்பீடு திட்டத்தில் கறவை பசுக்கள் காப்பீடு திட்டம், 21-ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணிகள்,1962 கால்நடை ஊா்திப் பணிகள்,கால்நடை வளா்ப்போருக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ள புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்குதல், தெரு நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள்,மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டறிந்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் பிரசன்னா, துணை இயக்குநா் செந்தில்நாதன், ஆவின் பொது மேலாளா் ராஜேஷ், துணைப் பதிவாளா் (பால்வளம்) ஸ்ரீகலா,கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா்கள் தண்டபாணி, ஜெய்சிராணி, கால்நடை மருத்துவா் பாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.விழுப்புரம் திடீா்குப்பம்,அகரம் பேட்டையைச் சோ்ந்தவா் ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தா் (32)... மேலும் பார்க்க

வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது : விசிக தலைவா் தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிடும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.விழுப்புரம் மாவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை தங்கள் பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்தில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது

தனியாா் சொகுசுப் பேருந்தில் பெற்றோருடன் பயணித்த சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்து,அதை கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த ஓட்டுநா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ உ... மேலும் பார்க்க

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தல், கொட்டகை அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வ... மேலும் பார்க்க