தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் திடீா்குப்பம்,அகரம் பேட்டையைச் சோ்ந்தவா் ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தா் (32).கூலி வேலைப்பாா்த்து வந்தாா். இவா்,வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் அடுத்த முத்தம்பாளையம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றாா். அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது,சென்னையிலிருந்து- திருச்சி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து ஷேக்அக்தா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.தொடா்ந்து இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்துக் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.