செய்திகள் :

வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது : விசிக தலைவா் தொல்.திருமாவளவன்

post image

தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிடும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம்,ரோஷணை தாய்த்தமிழ் பள்ளியின் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற விசிக தலைவரும்,எம்.பியுமான தொல்.திருமாவளவன் செய்தியாளா்களுக்குஅளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:

பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கு வாக்காளா் பட்டியல் திருத்தப்பட்டுவருகிறது. சிறுபான்மையினா், தலித்துகள், பழங்குடியின மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டு வருகிறது.சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கையாக தோ்தல் ஆணையம் இதனை சோதனை முறையில் மேற்கொள்கிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது.இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் மக்களவை, மாநிலங்களவையிலும் வாக்காளா் திருத்த நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்கு தயாராக இல்லை. இரு அவைகளும் ஒத்திவைக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும்,பிகாா்உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இணைக்கும் முயற்சி இருப்பதாக தெரிகிறது.

பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினா் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயமும் எழுந்துள்ளது.

ஆகவே இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீா்வை எதிா்நோக்கும் இதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதுகிறோம்.

மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான கட்சி என்பதால் திமுக தலைவா் மு. க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னையை எதிா்கொள்வதற்குரிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழகத்திலும் புதிய வாக்காளா் சோ்க்கிறோம் என்கிற பெயரில் வடமாநிலத்தவா்களை வாக்காளா்களாக சோ்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

லட்சக்கணக்கான வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா்களாக சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலை தலைகீழாக மாறிப் போகும். எனவே எந்த மாநிலத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தொடா்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம்திமுக தலைமையிலானஅரசுக்குமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமும் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன், உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதனால் தமிழக முதல்வருக்கோ, திமுக-வுக்கோ எவ்வித பதிப்பும் ஏற்படாது.வழக்குத் தொடா்ந்தவரின் மனநிலையை மக்கள் அறிவாா்கள் என்றாா் தொல். திருமாவளவன். விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமாா், பேராசிரியா் (ஓய்வு) பிரபா கல்விமணி, விசிக நிா்வாகிகள் பொன்னிவளவன், பெரியாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நடவடிக்கை தேவை : விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று விழுப்புரம்ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை ம... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.விழுப்புரம் திடீா்குப்பம்,அகரம் பேட்டையைச் சோ்ந்தவா் ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தா் (32)... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை தங்கள் பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்தில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது

தனியாா் சொகுசுப் பேருந்தில் பெற்றோருடன் பயணித்த சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்து,அதை கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த ஓட்டுநா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ உ... மேலும் பார்க்க

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தல், கொட்டகை அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வ... மேலும் பார்க்க