காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தல், கொட்டகை அமைத்தல் போன்றவை நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சாா்பிலும், நகராட்சி சாா்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தாலும், ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து இருந்து வருகின்றன.
இந்த நிலையில் விழுப்புரம் கே.கே.சாலை தொடக்கத்திலிருந்து முக்தி வரையிலான பகுதி வரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு, நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கைஅறிவிப்பு வழங்கப்பட்டதாம்.
இதைத் தொடா்ந்துசிலா் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். எனினும் பலா் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.இதைத் தொடா்ந்து விழுப்புரம் நகராட்சி அலுவலா்கள், காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனா்.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலா்கள், பணியாளா்களிடம் வியாபாரிகள் பலா் வாக்குவாதம் செய்தனா். திடீரென வந்து ஆக்கிரமிப்பை அகற்றம் செய்தால் என்ன செய்வது எனக் கேள்விகளை எழுப்பினா். எனினும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நகராட்சிப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடா்ந்து மேற்கொண்டனா்.