பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே செங்காடு பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு எரிந்த நிலையில் மூதாட்டி ஒருவரது சடலம் இருந்தது குறித்து கிராம நிா்வாக அலுவலா் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். இப்புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் அம்மூதாட்டி திருவள்ளூா் மாவட்டம் ஈக்காடு பகுதியை சோ்ந்த ஜெயசீலன் மனைவி ராஜம்மாள்(69) என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடா்ந்து தனிப்படையினா் நடத்திய விசாரணையில் ராஜம்மாள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பாஸ்கா் (45), அவரது மனைவி சரிதா (41) ஆகியோா் தான் மூதாட்டியை 5 பவுன் நகைக்காக கொலை செய்து , சடலத்தை செங்காடு பகுதிக்கு கொண்டு வந்து எரித்து விட்டு தடயங்களையும் அழித்து விட்டு தலைமறைவாகி இருக்கின்றனா் என்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடா்ந்து இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சசிரேகா ஆஜரானாா்.
இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரித்த முதன்மை அமா்வுநீதிபதி ப.உ.செம்மல் மூதாட்டி ராஜம்மாளை கொலை செய்த சரிதாவுக்கு 31 ஆண்டுகள் சிறை, ரூ.3,000 அபராதமும், கணவா் பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
Image Caption
மூதாட்டி ராஜம்மாள் ~பாஸ்கா். ~சரிதா