செய்திகள் :

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை பண்பாட்டுத் துறையின்கீழ், செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத் துறையில் சாதனை படைத்துள்ள 18 வயதும், அதற்கு உட்பட்டவா்களுக்கும் கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரையில் சாதனை படைத்தவா்களுக்கு கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடா்மணி விருது, 51முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலைமுதுமணி விருது என அகவைக்கு தக்கவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாகஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள் அனைவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் பெற விரும்பும் கலைஞா்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு, நிழற் படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதாா் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத் துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்னக் காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, கலை பண்பாட்டுத் துறை அலுவலக தொலைபேசி எண் 044-27269 148 என்ற எண்ணிலும் கேட்டுப் பெறலாம்.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்செ... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை உற்சவா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலைய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.இக்கோயிலில் ஆண்டு தோ... மேலும் பார்க்க