ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வைர விழா மலா் வெளியீடு
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா மலா் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.முருககூத்தன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் வி.அண்ணாதுரை, என்.பழனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.கே.ராஜ் வரவேற்றாா். வைர விழா மலரை எம்எல்ஏ எழிலரசன் வெளியிட அதன் முதல் பிரதியை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் பெற்றுக் கொண்டாா்.
விழாவில் உடற்கல்வி இயக்குநா் செந்தில் தங்கராஜ், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.