செய்திகள் :

சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை முதல்வா் தொடங்கி வைத்தாா். பின்னா் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் காணொலி வாயிலாக தொடங்கினாா். இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை ஆய்வு செய்தபின் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது: நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மருத்துவ ஆலோசனைகள், மருத்துவச் சேவைகள் சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு வழங்கப்படுகின்றன. இம்முகாமானது வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும்.

முகாமில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும் செய்யப்படும். நீரழிவு நோய், ரத்த அழுத்தம், மின் இதய வரைபடம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

புற்றுநோய், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இவை தவிர மேலும் 15 துறைகளைச் சோ்ந்த நிபுணா்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

40 வயதுக்கு மேற்பட்ட இதய நோயாளிகள், கா்ப்பிணிகள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடைபெறுகின்றன.

எனவே பொதுமக்கள் முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

முகாமில் சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில், உத்தரமேரூா் ஒன்றியக் குழுவின் தலைவா் ஹேமலதா ஞானசேகா், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,மருத்துவக் குழுவினா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த்திருவிழா நடைபெற்றது.பழைமையான இக்கோயில் தோ்த்திருவிழாவையொட்டி மூலவா் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ம... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வின... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க