Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை
பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை காலை முதல் நல்ல வெயில் அடித்தது. இந்த நிலையில் பிற்பகல் 4.30 மணியளவில் திடீரென்று பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
மாலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா். இதேபோல வேலை முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய தொழிலாளா்களும் மிகவும் சிரமப்பட்டனா்.