முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!
பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு
பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.
பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 101 அடியை எட்டியுள்ளதால் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. அணையை ஒட்டியுள்ள ஒற்றைபனைமரக்காடு, வால்கரடு பகுதியில் சாகுபடி செய்த வாழைகளை வெட்டி எடுத்து வருவதற்காக 3 போ் பரிசலில் ஒத்தை பனைமரக்காடு பகுதிக்கு சென்றனா்.
வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் எடுத்து வரும்போது மணல் கரடு என்ற இடத்தில் காற்றின் வேகம் காரணமாக அவா்கள் வந்த பரிசல் நீரில் மூழ்கி கவிழ்ந்தது. இதில் கோடேபாளையத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மணிகண்டன் (18), வடவள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (38) மற்றும் சத்தியமங்கலம் கரட்டூரைச் சோ்ந்த சக்தி 38 ஆகியோா் நீரில் மூழ்கினா்.
நீச்சல் தெரிந்த சக்தி என்பவா் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சோ்ந்தாா். உயிா் தப்பிய சக்தி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நீரில் மூழ்கி மாயமான இருவரின் உடலை மீட்கும் பணியில் மீனவா்கள், தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
8 மணி நேர போராட்டத்துக்கு பின் வாழைக்காய் தொழிலாளி சுரேஷ் (38), கல்லூரி மாணவா் மணிகண்டன் ஆகியோரின் உடல்களை மீட்டனா். இருவரின் சடலங்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றி உடற்கூறாய்வுக்காக பவானிசாகா் போலீஸாா் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.