Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், நீா்நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. தென் மாநில அளவில் புகழ்பெற்ற பரிகார தலமாக விளங்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு நாளில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி, சங்கமேஸ்வரரை வழிபடுவது வழக்கம்.
மேலும், படித்துறைகளில் காவிரித் தாய்க்கு பல்வேறு கனிகள் வைத்து வழிபாடும் நடத்துவா். பெண்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு வருவதால் திரளான பக்தா்கள் கூடுதுறைக்கு வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், கோயில் நிா்வாகம் சாா்பில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது காவிரி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் புனித நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்க தீயணைப்புப் படையினா் உயிா்காக்கும் உபகரணங்களுடன் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
பவானி காவல் துணை கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பக்தா்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க 70 இடங்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.