Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?
``மது விலக்கு இருப்பதால்.." - சூரத் டு பாங்காக் விமான பயணத்தில் விற்றுத்தீர்ந்த சரக்குகள்!
குஜராத் மாநிலத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கவலையும் தெரிவிகின்றனர். சுற்றுலா பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஹோட்டல்களில் மதுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்வதற்காக சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனம், சூரத்தில் இருந்து பாங்காக் செல்ல விமான சேவையை நேற்று தொடங்கியது. வெளிநாட்டிற்கு விமானம் இயக்கப்பட்டதால் அதில் மது அனுமதிக்கப்பட்டது. விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். விமான பயணம் 4 மணி நேரம் ஆகும்.
அது பட்ஜெட் விமானம் என்பதால் பயணிகளுக்கு மது இலவசம் கிடையாது. பணம் கொடுத்து பயணிகள் மது வாங்கிக்குடித்துக்கொள்ளலாம். குஜராத் மாநிலத்தில் இருந்து விமானம் இயக்கப்பட்டதால் யாரும் மது அருந்தமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் விமான நிறுவனம் குறைந்த அளவு மது மட்டுமே விமானத்தில் கையிருப்பு வைத்திருந்தது. ஆனால், விமானம் புறப்பட்டவுடன் பயணிகள் மது ஆர்டர் செய்து குடிக்க ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக பயணிகள் மதுவை வாங்கி குடித்துக்கொண்டே இருந்தனர். இதனால் விமானத்தில் பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் மது காலியாகிவிட்டது. இதனால் பயணிகள் கோபத்திற்கு ஆளானார்கள். மது இல்லாத கோபத்தை பயணிகள் சோசியல் மீடியாவில் திட்டித்தீர்த்தனர்.
ஆனால், விமானத்தில் போதிய அளவு மதுவும், உணவும் கையிருப்பு இருந்ததாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 100 மில்லிக்கு மேல் பயணிகளுக்கு மது கொடுப்பதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 50 மில்லி மது அதிக பட்சமாக 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட் லேபிள், பீப் பாஸ்டர் ஜின், பகார்டி ஒயிட் ரம் போன்றவை ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. விமானத்தில் சாப்பாட்டிற்கு முன்கூட்டியே ஆர்டர் செய்திருக்கவேண்டும். அல்லது விமானத்தில் பணம் செலுத்தி சாப்பாடு வாங்கிக்கொள்ளலாம்.