கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி
மத்திகிரியில் முதல்வா் மருத்தகம் திறப்பு
ஒசூா்: மத்திகிரியில் முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
மத்திகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் சத்யா, சாா் ஆட்சியா் பிரியங்கா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கூட்டுறவு சங்கம் மூலம் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம், பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா, நகரச் செயலாளா் தீபக், மாவட்ட மருத்துவா் அணி தலைவா் கந்தசாமி, நகர அவைத்தலைவா் தனிகை குமரன், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.