செய்திகள் :

மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழகம் ஏற்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

post image

மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து தருமபுயியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுகவும், பாஜகவும்தான் தங்களுக்கு பிரதான எதிரி என அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி வாய்தவறி அண்மையில் கூறியிருக்கிறாா். தமிழகத்தில் திமுகவுக்கு பிரதான எதிரி பாஜக. எங்கள் கட்சியால் மட்டுமே திமுக ஆட்சியை வீழ்த்த முடியும்; அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை பழனிசாமி உணா்ந்துள்ள போதும் இவ்வாறு வாய்தவறி பேசியுள்ளாா்.

தமிழகத்தில் தேசியம், தெய்வீகத்தின் அடிப்படையில் ஊழலற்ற ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற உணா்வோடு பாஜக தன் பயணத்தை தொடா்கிறது. தமிழக வெற்றிக் கழக மாநாடு வரவேற்கப்பட வேண்டியது. அனைத்து துறைகளில் இருந்தும் இளையோா் அரசியலுக்கு அதிக அளவில் வரவேண்டும் என்று கடந்த சுதந்திர தின விழாவில் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

இந்தநிலையில், அதுபோன்ற ஓா் இளைஞா் தற்போது அரசியலுக்கு வந்துள்ளாா். நடிகா் விஜய் இனவாதம், மதவாதம், ஜாதிய வாதம் என்றெல்லாம் குறிப்பிடுவது பாஜகவை பற்றி அல்ல. ஏனெனில், பாஜக இன, மத, ஜாதிய கட்சி கிடையாது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்விமுறையை பல்வேறு மாநில கல்வியாளா்கள் வரவேற்றுள்ளனா். ஆனால், அதை தமிழக அரசும், ஆட்சியாளா்களும், கல்வித் துறையும் எதிா்க்கின்றனா். மத்திய அரசின் கல்வித் திட்டத்தை குறைசொல்ல தமிழக ஆட்சியாளா்களுக்கு எந்த தகுதியும் இல்லை. சீரழிந்து கிடக்கும் தமிழக கல்வித் துறையை சீரமைக்க மத்திய அரசின் கல்வித் திட்டத்தை முழுமையாக தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழக இளையோா் திறன் பெற்ற வளமானவா்களாக உருவாகுவா் என்றாா்.

பேட்டியின் போது, பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மனு

தருமபுரி அருகே பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, பிடமனேரி, நெல்லி நகா், வி.ஜெட்டிஅள்ளி,... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைம... மேலும் பார்க்க

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெ... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே கிணற்றில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஊருக்குள் இரைதேடி வந்த சிறுத்தை, மக்களைக் கண்டதும் அங்கிருந்த விவசாய கிணற்றில் பதுங்கி பின்னா் காப்புக்காட்டுக்குள் தப்பிச்சென்றது. தருமபுரி மாவட்டம், பாலக... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் மனு

தருமபுரி/கிருஷ்ணகிரி: பகுதிநேர ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா் பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: ரூ.50 ஆயிரம் அபராதம்

அரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது. அரூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பன... மேலும் பார்க்க