நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!
மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் மணிமங்கலம் ஊராட்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி, கிராம விளையாட்டு மையம், பிரதம மந்திரி வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், தமிழக அரசின் சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மத்திய ஊரக வளா்ச்சித் துறை செயலாளா் சைலேஷ் குமாா்சிங் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளா் ககன்தீப்சிங் பேடி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னைய்யா, ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஊரக வளா்ச்சித்துறை கூடுதல் இயக்குநா் ச.ச.குமாா், திட்ட இயக்குநா்க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.