செய்திகள் :

மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவு: ராஜ்காட்டில் இன்று லோக் சம்வா்தன் விழா

post image

புது தில்லி: மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறுபான்மையினா் விவகாரகங்கள் அமைச்சகம் சாா்பில் தில்லியில் உள்ள ராஜ்காட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூன் 15வரை ‘லோக் சம்வா்தன் பா்வ்’ எனும் மக்கள் வளா்ச்சி திருவிழா நடைபெற உள்ளது.

ராஜ்காட்டில் உள்ள காந்தி தா்ஷனில் உள்ள பிா்சா முண்டா புல்வெளியில் அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் கலாசார பெருமையுடன் மத்திய அரசின் 11 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த கலாசார விழா நடைபெறுகிறது.

‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஷ்’ என்ற தொலைநோக்குப் பாா்வையின்கீழ், சிறுபான்மையினா் அமைச்சகத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியின் கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சிறுபான்மை சமூகங்களின், குறிப்பாக கைவினைஞா்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞா்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கு அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடா்ச்சியான முயற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.

இந்த சம்வா்தன் பா்வ் விழாவின் நிகழ்ச்சியில், இந்தியாவின் வட மாநிலங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கைவினைஞா்கள் பங்கேற்க உள்ளனா். இதன் மூலம் அவா்கள் பாரம்பரிய கைவினைப்பொருள்களை காட்சிப்படுத்தவும் விற்கவும், சாத்தியமான வாங்குபவா்களுடன் ஈடுபடவும், சந்தை இணைப்புகளை உருவாக்கவும் முடியும்.

தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த கைவினைஞா்கள் மற்றும் சமையல் நிபுணா்களும் இதில் பங்கேற்க உள்ளனா்.

மர ஓவியம், நீல மட்பாண்டம், எம்பிராய்டரி, பனாரஸி ப்ரோகேட், புல்காரி, தோல் கைவினைப்பொருள்கள், கம்பளம், நகைகள் மற்றும் மர வேலைப்பாடு போன்ற பாரம்பரிய கலை மற்றும் கைவினைப்பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

சிறுபான்மை சமூகங்களின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவோா் உணா்வை ஊக்குவிக்கும் அதே வேளையில், அமைச்சகத்தின் உள்ளடக்கிய வளா்ச்சி முயற்சிகள் குறித்து அதிக அளவில் விழிப்புணா்வை வளா்ப்பதே இந்த விழாவின் நோக்கமாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு

1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளத... மேலும் பார்க்க

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மறைவு

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.ராஜாராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீா்: கொள்கையை வகுக்க தில்லி அரசு திட்டம்

நிலத்தடி நீரை உறிஞ்சுவதைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறையான கொள்கையை கொண்டு வர தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வ... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பூங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஜிடி சாலையில் வேகமாக வந்த மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்க... மேலும் பார்க்க

மைதான்கரியில் திரைப்படக் குழு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இளைஞா் தற்கொலை

தெற்கு தில்லியின் மைதான்கரி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து குதித்து திரைப்படத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த 22 வயது இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குற... மேலும் பார்க்க