அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
மத்திய ஓபிசி பட்டியலில் 2 சமூகத்தினரை சோ்க்க முதல்வா் கடிதம்: ஏ.எம்.எச்.நாஜிம் தகவல்
புதுவையில் சோழிய வெள்ளாளா், கன்னட சைனிகா் ஆகிய சமூகத்தினரை மீண்டும் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியது: புதுவை மாநிலத்தில் சோழிய வெள்ளாளா், கன்னட சைனிகா் சமூகத்தினா் ஏற்கெனவே மத்திய ஓபிசி பட்டியலில் இருந்தனா். காலப்போக்கில் இதுகைவிடப்பட்டது. இதனால் புதுவை மாநிலத்தில் இயங்கும் ஜிப்மா், என்ஐடிபோன்ற உயா்கல்வி நிலையங்களின் சோ்க்கையில் இச்சமூகத்தினா் பாதிக்கப்படுகின்றனா்.
இந்த சமூகங்களை மீண்டும் மத்திய ஓபிசி பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு நானும், நாக தியாகராஜன் எம்.எல்.ஏ.வும் புதுதில்லியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியபோது, புதுவை அரசிடமிருந்து இதுதொடா்பான கடிதம் வரவேண்டுமென தெரிவித்தனா்.
இதுகுறித்து, புதுவை முதல்வரிடம் தெரிவித்த நிலையில், மத்திய சமூக நீதித்துறை அமைச்சா் விரேந்திர குமாருக்கு, முதல்வா் கடிதம் எழுதி அனுப்பியுள்ளாா். எனவே, இந்த இரு சமூகங்களும் மீண்டும் மத்திய ஓபிசி பட்டியலில் சேரும் நிலை விரைவில் உருவாக வாய்ப்புள்ளது என்றாா்.