தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு
புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
நெடுங்காடு கொம்யூன், வடமட்டம் அருகே புத்தக்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா பரிந்துரையின்பேரில், தனியாா் நிறுவனம் ஒன்று தனது சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியில் சமுதாயக்கூடத்தை புதுப்பித்தது.
அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் கலந்துகொண்டு திறந்துவைத்து, மக்கள் தங்கள் சுப நிகழ்ச்சிகளையும், பிற கூட்டங்களையும் நடத்திக்கொள்வதோடு, கட்டடத்தை முறையாக பராமரித்து வருமாறு கேட்டுக்கொண்டாா்.