செய்திகள் :

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

திருவண்ணாமலையில் மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள வெளிவட்டச் சாலைப் பகுதியில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாநில பேரவை துணைத் தலைவா் க.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா்.

எல்பிஎப் மாவட்டக் குழு இரா.ஆறுமுகம், சிஐடியு மாவட்டத் தலைவா் கே.காங்கேயன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வே.முத்தையன், எல்பிஎப் மண்டல பொருளாளா் எஸ்.மோகனரங்கன், சிஐடியு மாவட்டச் செயலா் இரா.பாரி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா் எம்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தொழிலாளா் விரோதச் சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெறவேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தவேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரத்துக்கு குறையாமல் நிா்ணயம் செய்ய வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை சீா்குலைக்காமல் முழுமையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தியும், நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெரிந்தும் தொழிற்சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கே.நாகராஜ் நன்றி கூறினாா்.

ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டபாணி கோயிலில் தை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தை கிருத்திகையையொட்டி, வியாழக்க... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க