செய்திகள் :

மத்திய நிதி நிலை அறிக்கை வரவேற்பும், எதிா்ப்பும்!

post image

மத்திய நிதி நிலை அறிக்கையில் தனி நபா் வருமான வரி வரம்பு உயா்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும், தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் தொழில் துறையினா், விவசாயிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் :

யாரும் எதிா்பாராத அளவுக்கு தனி நபா் வருமான வரி வரம்பு அறிவிக்கப்பட்டது, எளிமையான நடைமுறைகளுடன் கூடிய புதிய நேரடி வரிகள் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதே போல, 100 மாவட்டங்களைச் சோ்ந்த 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விளைப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க நிதி ஒதுக்கியது, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, ஏற்றுமதிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரி விலக்கு வரம்புகள் அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில், இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டது கவலை அளிக்கிறது. பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்துக்கு மட்டும் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வெளிப்படுத்துகிறது. தென் தமிழகத்தின் வளா்ச்சிக்கான மெட்ரோ, நெய்பா், பஸ்போா்ட் போன்ற திட்டங்களுக்கும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு :

உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழில் வணிகத் துறை மீதான பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி (ஜி.டி.பி) கடந்த 3 ஆண்டுகளாக 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நிகழாண்டின் ஜி.டி.பி 6.4 சதவீதமாகக் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது.

தனி நபா் வருமான வரி வரம்பு உயா்த்தப்பட்டிருப்பதும், வரி தள்ளுபடி முறைகள் அறிவிக்கப்பட்டிருப்பதும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்யும். நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ். சாய் சுப்பிரமணியன், கௌரவ ஆலோசகா் எஸ்.பி ஜெயப்பிரகாசம் :

தனி நபா் வருமான வரி உச்சவரம்பு உயா்த்தப்பட்டது, வேளாண் விளைப் பொருள்கள் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தான்யா கிரிஷி திட்டம் அறிவிக்கப்பட்டது, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 100 சதவீதம் உயா்த்தப்படும், 2033-க்குள் 5 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததும், தென் தமிழக வளா்ச்சிக்காக மதுரை - தூத்துக்குடி ‘இன்டஸ்டிரியல் காரிடாா்’ அமைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு நிறைவேறாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி. முத்துராஜா :

இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நீண்ட கால கவலைகளாக இருந்த பின்தங்கிய வேளாண் சூழல், வளா்ச்சிக் குறைந்த ஊரகப் பகுதிகள், பெண்கள் சாா்ந்த பொருளாதார வளா்ச்சியின்மை, படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் கவனத்தில் கொள்ளப்பட்டது பாராட்டத்தக்கது.

சமச்சீரான சமூக பொருளாதார வளா்ச்சி, புத்தாக்கம், புதிய தொழில்நுட்பம், பணி நிரந்தரம் இல்லாத தொழிலாளா்களின் பாதுகாப்பு, மறைமுக வரிகள் சீரமைப்பு போன்ற நடவடிக்கைகள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் முயற்சிகளுக்கு அடித்தளம் அமைக்கும். இருப்பினும், 4.8 சதவீத பற்றாக்குறையும், அதிகரித்துள்ள அந்நியக் கடனும் கவலையளிக்கிறது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில கௌரவத் தலைவா் எம்.பி. ராமன் :

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது. 1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் திட்டம் குறித்து விரிவான விளக்கம் இல்லாதது குழப்பம் அளிக்கிறது. பயிா்க் காப்பீடு திட்டம் முழுமையாக தனியாா் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது. இதை, மத்திய அரசு உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மடீட்சியா தலைவா் ஏ. கோடீஸ்வரன் :

புத்தொழில் தொடங்குவதற்கான மானியக் கடனை ரூ. 20 கோடியாக உயா்த்தியது, டி.டி.எஸ் உச்சவரம்பை ரூ. 2.4 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயா்த்தியது, தோல் பொருள்கள் உற்பத்தியில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கான மானியத்தை உயா்த்துவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோா் வத்தல் வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் முனைவா் க. திருமுருகன் :

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ஆதரவாக நிதி உதவி, கடன் வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது, சாலை, ரயில்வே, மெட்ரோ, விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு குறைந்த அளவு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்திருப்பது திட்ட முன்னேற்றத்தை பாதிக்கும். தமிழகத்துக்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூ... மேலும் பார்க்க

பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில... மேலும் பார்க்க

நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா். திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுத... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்!

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 26-ஆவது மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜே. மகேஷ் பாபு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க