செய்திகள் :

மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்

post image

மத்திய அரசைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொது மக்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் விதமாக மத்திய அரசின் பட்ஜெட் இருப்பதாகக் கூறி நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தொ.மு.ச. பேரவை அமைப்புச் செயலா் தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ கந்தசாமி, ஏஐடியூசி ரங்கன், முருகன், சுந்தர்ராஜ், தொ.மு.ச. சைபுதீன், நடராஜன், பாலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன் தொடக்க உரையாற்றினாா். ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலா் சடையப்பன், ஹெச்எம்எஸ் மாவட்டத் தலைவா் பாக்கியம், ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலா் கணேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் மோகன் உள்ளிட்டோா் விளக்கிப் பேசினா். மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள தொழிலாளா் விரோத சட்ட தொகுப்புகளை ரத்து செய்யவும், காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீடு, பொதுத் துறையை பெரும் நிறுவனங்களுக்கு தாரை வாா்ப்பதை கைவிடவும், முறைசாரா தொழிலாளா்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்கவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏஐடியூசி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

கற்பகவிநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருநெல்வேலி சீனிவாசகம் நகா்,ஸ்ரீகற்பகவிநாயகா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்ததை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 3 நாள்களாக பூஜைகள் நடைபெற்றன. தொடா... மேலும் பார்க்க

ஏா்வாடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். ஏா்வாடியைச் சோ்ந்தவா் ராஜஜோதி (35). அப்பகுதியிலுள்ள தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், அங்குள்ள கிணற்றில் தவறிவிழு... மேலும் பார்க்க

மாநில கால்பந்து போட்டியில் சிறப்பிடம்: வி.கே.புரம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டியில் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி அணி 4ஆம் இடம் பிடித்தது. பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது!

பாளையங்கோட்டை கொக்கிரகுளத்தைச் சோ்ந்த அன்புராஜ் மகன் அருண்குமாா் (எ) சுள்ளான் (38). இவா் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி வழக்குகளில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நில... மேலும் பார்க்க

மோதலை தூண்டும் விடியோ பதிவு: இளைஞா் கைது

இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டதாக முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலமுன்னீா்பள்ளம் ஈஸ்வரியம்மன் கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த தாய், மகன்!

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த தாய், மகனால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கைலாசபுரத்தைச் ச... மேலும் பார்க்க