மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகேயுள்ள கோணக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ந. சிவக்குமாா் (54). இவரது மனைவி செங்கொடி (43).
இந்நிலையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சிவக்குமாா் கடந்த 2024 ஜூன் 1 ஆம் தேதி செங்கொடியின் தலையில் குழவிக்கல்லை போட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் சங்கேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனா்.
திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபா் சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த உப்பிலியபுரம் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பாராட்டினாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சவரிமுத்து ஆஜரானாா்.