Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
ஆண்டிபட்டி அருகேயுள்ள மயிலாடும்பாறையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடும்பாறை, வண்ணாரப்பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (35). இவரது மனைவி சுவாதி (29). கட்டடத் தொழிலாளியான ராமச்சந்திரன் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதையடுத்து அண்மையில், சுவாதியுடன் ராமச்சந்திரன் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுவாதி அளித்த புகாரின்பேரில், மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை சனிக்கிழமை கைது செய்தனா்.