செய்திகள் :

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

post image

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன. ஆனால் 2023-ஆம் ஆண்டில் சஹாலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய தனஸ்ரீ வர்மா விவாகரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்துவந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த சஹால், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். இருப்பினும், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு அவரை எடுத்தது.

இதையும் படிக்க..விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் கடந்த 18 மாதங்களாக விவாகரத்து கோரி வந்த நிலையில் மும்பை பாந்த்ரா நீதிமன்றம் இருவரும் விவாகரத்து வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹலிடம் இருந்து தனஸ்ரீ குடும்பத்தினர் ஜீவனாம்சம் ரூ.60 கோடி கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிவந்தன.

இந்த நிலையில், இந்த ஜீவனாம்சன் குறித்த தகவலை தனஸ்ரீ குடும்பத்தினர் முழுமையாக மறுத்துள்ளனர். இந்தத் தகவல் முழுமையான அடிப்படை ஆதரமற்றவை. மேலும், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவதை கண்டித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தனஸ்ரீ வர்மா குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாங்கள் இந்த ஜீவனாம்சம் குறித்த தகவலைக் கண்டு மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த தொகையையும் கோரவில்லை. இது போன்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க...ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய பென் டக்கெட்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 3 கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது... மேலும் பார்க்க